Thursday, March 14, 2013

சிந்துவெளி நாகரிகம் (கி.மு 3250 - கி.மு 2750)

சிந்துவெளி நாகரீகத்தின் தோற்றம்
இந்தியாவின் வடமேற்கு எல்லையிலே சிந்து நதிப் பள்ளத்தாக்கில் தலைசிறந்த நாகரீகம் ஒன்று வரலாற்றுக்க முற்பட்ட காலத்தில் விளங்கியதென்பது அகழ்வாராய்ச்சியின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
இதுவே சிந்து வெளி நாகரீகம் என அழைக்கப்படுகின்றது. இங்கு தென் பஞ்சாப்பில் ஹரப்பா எனும் இடத்திலும் சிந்து மாகாணத்தில் மொகெஞ்சொதாரோ எனும் இடத்திலும் தொல்பொருள் ஆய்வாளர்கள் ஆராய்ச்சிகளை மேற்கொண்டார்கள்.
இதன் பயனாக கி.மு 3000 ஆண்டளவில் நன்கு திட்டமிட்ட பெரிய நகரங்கள் காணப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. ஏறத்தாழ 1000 மைல் தூர இடை வெளிகளில் அமைந்திருந்த இந்த இரு நகரங்களும் ஓரே வகையான அமைப்புடையனவாகக் காணப்பட்டன.
இவை பரந்து கிடந்த ஒரு பேரரசின் இரு தலைநகரங்களாய்  விளங்கியிருத்தல் வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். இந்த நாகரீகம் இருக்கு வேதம் கூறும் ஆரியருடைய நாகரிகத்திலும் முற்றாக வேறுபட்டது. தென்னிந்தியாவிலே உள்ள திராவிடருடைய நாகரிகத்தைப் பெரிதும் ஒத்துள்ளது. எனவே சிந்துவெளி நாகரிகத்தை தோற்றுவித்தோர் திராவிட இனத்தவரே, என்பதனை தற்போது ஆராய்ச்சியாளர்கள் தற்போது ஒப்புக்கொள்கின்றார்கள்.

No comments:

Post a Comment